சிவனொளிபாதமலை யாத்திரையில் பிளாஸ்டிக் முற்றாகத் தடை

சிவனொளிபாதமலை யாத்திரையின் போது, பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உக்காத திண்மப் பொருட்களை கொண்டுசெல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலையின் யாத்திரைக் காலம் ஆரம்பமாகின்ற போது, பொலித்தீன் பொருட்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை கட்டாயமாக கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட சிரேஷ்ட பொது சுகாதார ஆய்வாளர் காமினி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்காக பொலிசாரின் துணையுடன், மஸ்கெலியாவில் இருந்து நல்லதண்ணி சிவனொளிபாதமலைக்கான பாதை வரையில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு