பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு அரச நிறுவனங்களின் நிதி விடயங்கள் தொடர்பில் பொது கணக்கு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாதீடு தொடர்பிலான இன்றைய விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்னவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

32ஆவது பொது கணக்குகள், 831 நிறுவனங்களின் நிதி செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், பாதீட்டின் இரண்டாம் வாசிப்பின் மூன்றாவது நாள் விவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு