கிளிநொச்சியில் மாவீரர்தின நிகழ்வு ஏற்பாடு தீவிரம்

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் கிளிநொச்சியிலுள்ள மூன்று மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியற் கட்சிகளெனப் பலரும் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடாகி இருந்த போதிலும், இந்த முறை இதுவரைக்கும் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு