வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்திற்கு முஸ்தீபு

வேலையற்ற பட்டதாரிகளுக்குரிய நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால் நாளை மறுதினம் யாழ். மாவட்ட செயலகம் முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், தம்மால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான 143ஆவது நாள் போராட்டத்தில், பட்டதாரிகளை பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளராக இந்த வருடத்துக்குள் நியமிப்பதாக குறிப்பிடப்பட்டமைக்கு அமைவாக, தமது போராட்டம் கைவிடப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நியமனங்களையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனாலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தின் போது, பட்டதாரிகளின் கையெழுத்துகள் உள்ளடங்கிய மகஜர்கள், முதலமைச்சர், ஆளுநர், அரசாங்க அதிபர் ஆகியோரூடாக பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், ஊடகங்களுக்கும் அறிக்கை வழங்கப்படவுள்ளதால், அனைத்துப் பட்டதாரிகளும் வருகை தந்து, போரட்டத்தைப் பலப்படுத்துவதுடன், அவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு