வழமைக்குத் திரும்பியது யாழ். பல்கலைக்கழகம்

மூடப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் விரிவுரைகளுக்காக கடந்த 13 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதன் உபவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று கடந்த சில தினங்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர், அந்த போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிர்வாகம் யாழ். பல்கலைக்கழகத்தின் சில பீடங்களை தற்காலிகமாக மூட நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு