மாலபே வழக்கு விவகாரம்; நீதிபதிகள் குழாமிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு

மாலபே சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளை பதிவு செய்து கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இலங்கை மருத்துவ சபை முன்வைத்த மேன்முறையீட்டை விசாரித்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமிலிருந்து விலகுவதாக நீதிபதி பிரியந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் குறித்த பிரச்சினை தொடர்பாக நியமிக்கப்பட்ட புதிய குழு எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி அளவில் தமது பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதனையடுத்து குறித்த பிரேரணையை ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு சட்டமா அதிபர் சார்பாக நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சைட்டம் நிறுவனம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு