காமினி செனரத்ன என்னைச் சந்திக்கவில்லை – சீறுகிறார் அமைச்சர் சாகல

04 பில்லியன் ரூபா மக்கள் பணத்தை மோசடி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலணியின் பிரதானி காமினி செனரத் தம்மை சந்தித்ததாக வெளியான செய்தி பொய்யானதென சட்டம், சமாதானம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சாகல ரத்நாயக்க, அந்த தகவல் அடிப்படையற்றது எனவும், பொய்யானது மற்றும் வஞ்சனை மிக்கது எனவும் தெரிவித்துள்ளதுடன், அவ்வாறான ஒருவருடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு தமக்கு எந்தவொரு அவசியமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான, கொடுக்கல் வாங்கல்களின் ஊடக தமக்கு எந்தவொரு இலாபமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு