சட்டச் சிக்கல்களாலேயே தேர்தல் பிற்போடப்பட்டது

அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றம் சுமத்தியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்திலுள்ள சட்டச் சிக்கல்கள் காரணமாகவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், சமூக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதற்காகவே வரவு – செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், சமூக நிறுவனங்கள் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாத போது அவை சிறப்பாக இயங்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு