ஈரான் – ஈராக் எல்லையில் நிலநடுக்கத்தின் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

ஈரான் – ஈராக் எல்லைக்கு அண்மையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, குறைந்தது 450 பேர், ஈரானில் பலியானதுடன், 7,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குர்திஷ்தான் பிராந்தியத்தில் உள்ள, சுலைமனியா நகரத்தின் ஹலப்ஜா பகுதிக்கு அண்மையாக, இந்த நிலநடுக்கம் தாக்கியதாக ஐக்கிய அமெரிக்க நில அளவாய்த்துறை தெரிவித்தது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள், மலைப்பாங்கான இடங்களாக இருப்பதால், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்பதற்கான பணிகள், சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும், ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சில மிகத்தொலைவான கிராமப் பகுதிகளாக இருக்கும் நிலையில், மீட்புப் பணியாளர்கள் தாமதமாகியே அனுப்பப்பட்டதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென, உள்ளூர் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு