திருக்கோவிலில் மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை, திருக்கோவில் கடற்கரைப் பிரதேசத்தில் 17 வயதுடைய சஹாப்தீன் முகமட் அப்றின் என்ற மாணவனின் சடலம் கரையொதுங்கிய நிலையில், இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன், கடந்த 11ஆம் திகதி கடற்கரைக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற நிலையில் கடலில் மூழ்கிக் காணாமல் போயிருந்த நிலையிலேயே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் மயானத்துக்கு அருகிலுள்ள கடற்கரையில் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு