உணவுகளுக்கான எண்ணெய்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கத் தீர்மானம்

தேங்காய் எண்ணெய் மற்றும் உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் வேறு எண்ணெய்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

தேங்காய் எண்ணெயினூடாக விற்பானையாளர்கள் இலாபமடைவதனால் பாவனையாளர்களுக்கு எவ்வித இலாபமும் இல்லையென அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கவனம் செலுத்தி, இன்று கூடவுள்ள வாழ்க்கை செலவு குழுவில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி தேங்காய் எண்ணெய்க்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு