ஆட்கடத்தல் குறித்து புதிய சட்ட வரைபு

இலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்டவரைவு தயாரிக்கப்பட்டுவருவதுடன், சிறப்பு நடைமுறையொன்றையும் அமுல்ப்படுத்தவுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட ஒழுங்குமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதுடன், சிறப்பு நடைமுறையும் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக வலுவான சட்டங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வலுவான சட்டங்கள் இல்லாமல் போகும் பட்சத்தில், ஆட்கடத்தல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவது சிக்கலாக அமையும் என்பதால், இதன் ஓர் அங்கமாக, ஆட்கடத்தல்காரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக விரிவான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு