இலங்கையின் அரசியலிலும் சட்டவாக்கத்துறையிலும், பெண்களின் பிரதிநித்துவம் போதுமானதாக இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“பெண்களுக்கு அதிகாரம் – நாட்டுக்கு மாற்றம்” எனும் தொனிப்பொருளில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான தெளிவுபடுத்தல் செயற்றிட்டம் ஜனாதிபதி தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கான சட்டங்களை, தற்போதைய அரசாங்கம் உருவாக்கிச் செயற்படுத்துவதாகவும், சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை, பெண்கள் வேறுபட்ட கோணத்தில் அணுகுவதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, பெண்களின் முக்கியத்துவத்தை, தமது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் சகல துறைகளிலும், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகளவிலோ அல்லது சமமான அளவிலோ காணப்படுவதனையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.