கண் சத்திரசிகிச்சை விவகாரம்; மாகாண மட்ட விசாரணைகள் நிறைவு

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் போது கிருமித்தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து மாகாண மட்ட நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு மத்திய சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன் தெரிவித்துள்ளதுடன், தனியார் வைத்தியசாலைக்கு எதிரான விசாரணைகளை மாகாண ரீதியில் முன்னெடுக்க முடியாது என்பதால், மத்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய, சுகாதார பணிப்பாளர் தலைமையிலான குழு குறித்த தனியார் வைத்தியசாலை தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த மாதம் 21ஆம் திகதி 10 பேருக்கு கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது கண் சத்திரசிசிக்சைக்குட்படுத்தப்பட்டவர்களில் 09 பேர் கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு