ஜெனீவா சென்ற இலங்கைக்குழு

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் உலக பருவகால மீளாய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.

இக்குழுவில், வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் நாளையதினம் இந்த கூட்டத்தில் மீளாய்வு செய்யப்படவுள்ள நிலையில், 2012ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையின் உலக பருவகால மீளாய்வு கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள் சார்ந்ததாக இந்த ஆய்வு அமையுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு