எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ.சு.கவுடன் இணையப்போவதில்லை

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையாமல் விலகி, பரந்த கூட்டணியாக போட்டியிட மஹிந்த அணி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் சுதந்திர கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கு தயாரென மஹிந்த அணி முன்னதாக அறிவித்திருந்த போதிலும், அந்த அறிவிப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருந்து இதுநாள் வரையில் எந்த பதிலும் கிடைக்காத நிலையிலேயே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் இணையாமல், பிரத்தியேக கூட்டணியாக போட்டியிடத் தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு