அரச பணியாளர்களுக்கு சம்பளம் உயர்வு?

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் வேதனம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படுமென உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அலுவலக உதவியாளரில் இருந்து சட்டமா அதிபர் வரையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் இந்த வேதன அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கு அமைவாக, அலுவலக உதவியாளரின் அடிப்படை வேதனம் 14 ஆயிரம் ரூபாயில் இருந்து 23 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும், சட்டமா அதிபரது வேதனம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட மருத்துவர்களின் அடிப்படை வேதனம் 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 69 ஆயிரத்து 756 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும், இதற்கிடையில் அரச பணியாளர்களின் வேதனம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளின் பொருட்டு அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 12 பில்லியம் ரூபாய் மேலதிகமாக தேவைப்படுவதாகவும் அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு