தென்னை உற்பத்திகளுக்கான முக்கியத்துவம் பனை உற்பத்திகளுக்கும் வழங்க வேண்டும்

தென்னைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், பனைக்கு வழங்கப்படவில்லை என்றொரு கருத்து மேலோங்கியிருக்கின்றது. குறிப்பாக, பிளாஸ்ரிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களாக வரும் நிலையிலும்கூட பனை வளமானது அதிகப் பயன் தரக்கூடியது. அதுமட்டுமல்லாது, பனைசார் பாரம்பரிய உணவுகளின் நுகர்வோர்களாகிய எமது மக்களில் சுமார் 10 இலட்சம் மக்கள் தற்போது புலம்பெயர்ந்த நிலையில் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

எனவே பனை சார்ந்த உற்பத்திப் பொருட்களை பதனிட்டு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். அதேநேரம் இந்த உணவுப் பொருட்களை அந்தந்த நாட்டு மக்களிடையேயும் பிரபலப்படுத்த முடியும். அந்த வகையில் இவ்விடயம் தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்குமாறு நிதி அமைச்சரிடம் கேட்டுக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில், ஏற்றுமதி, இறக்குமதி நிதியளிப்பு அலகுடன் கூடிய அபிவிருத்தி வங்கி ஒன்று ஸ்தாபிக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல எற்பாடு. இதன் பயன்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் எமது தொழில்சார் முயற்சியாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். அந்தவகையில், இந்த வங்கி அமைக்கப்படுகின்ற நிலையில் அதன் பயன்பாட்டினை எமது பகுதி மக்களும் அடைகின்ற வகையில் ஏற்பாடுகள் தேவை என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு