பதில் பரீட்சைகள் ஆணையாளர் நியமனம்

பதில் பரீட்சைகள் ஆணையாளராக பீ. சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை பரீட்சைகள் ஆணையாளராக இருந்த டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார நேற்று முதல் அமுலுக்கு வரும்வகையில் கல்வியமைச்சுக்கு இடமாற்றப்பட்டமையால், ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தற்காலிகமாக பதில் பரீட்சைகள் ஆணையாளராக பீ. சனத் பூஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.ஜே.புஷ்பகுமார அண்மையில், வினாத்தாள் கசிவு சம்பவம் காரணமாக திடீரென கல்வியமைச்சின் பணிகளுக்காக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு