இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதல்

இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு இடையிலான போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி மூன்று போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது ஆட்டம் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி இந்திய சுற்றுலாவை மேற்கொண்டுள்ள நிலையில் 03 டெஸ்ட் போட்டிகளையும், 03 ஒருநாள் போட்டிகளையும் 03 இருபதுக்கு 20 போட்டிகளையும் எதிர்கொள்ளவுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் தினேஸ் சந்திமால் தலைமையிலான அணியில் அஞ்சலோ மெத்திவ்ஸ், திமுத்து கருணாரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவன் பெரேரா, லஹிரு திரிமான்ன, தனஞ்சன சில்வா, ரங்கன ஹேரத், விஷ்வ பிரனாந்து, லஹிரு கமகே, சுரங்க லக்மால், சதீர சமரவிக்கிரம, லக்ஷான் சந்தகென், தசுன் ஷானக, மற்றும் ரோஷான் சில்வா உள்ளிட்ட 15 வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு