கொழும்பில் காணி விலை அதிகரிப்பு

கொழும்பு மாவட்டக் காணிகளின் விலை 12.6 சதவீத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட காணி விலைச் சுட்டெண் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசையா சொத்துகள் பிரிவின் மேம்பாட்டைக் கண்காணிப்பதற்காக, இலங்கை மத்திய வங்கியால் பல சுட்டெண்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 1998ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில், காணிகள் தொடர்பான விலைச்சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுட்டெண்கள் தயாரிப்பில், மதிப்பீட்டுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட கொழும்பு மாவட்டத்திலுள்ள 05 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையிலான 50 பிரதேசங்களின் காணி விலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் காணிகள் தொடர்பான விலை, அண்மையில் அதிகரித்துள்ளமையை வெளிப்படுத்தியுள்ள இக்காணி விலைச்சுட்டெண்ணில், 2017ஆம் ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 12.6 சதவீத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு