அரச தொழிற்சாலை திணைக்களத்திற்கு நிதியொதுக்கீடு

அரச தொழிற்சாலைத் திணைக்களத்தின் செயற்றிறனை அதிகரிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவையால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அரச தொழிற்சாலைத் திணைக்களத்தின் செயற்றிறன் மற்றும் உற்பத்தி அளவை அதிகரிக்கும் நோக்கில், உயரத்தில் பொருத்தப்படுகின்ற 8 தொன் எடை கொண்ட நவீன கிரேன் (பாரம் தூக்கி) ஒன்றை, திணைக்களத்தின் தேவை நிமித்தம் கொள்வனவு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், அத்திணைக்களத்தின் நிறுவன கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்காக வளங்களைத் திட்டமிடுவதற்கான மென்பொருளொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வது தொடர்பில், அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு