எல்லை நிர்ணயக் குழுவின் திட்டத்திற்கமையவே உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழு வகுத்த திட்டத்துக்கமையவே உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது புரிகின்றது. இது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், எல்லை நிர்ணய விடயத்தில் கால தாமதம் ஏற்பட்டமையால் தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாது போனதாகவும், இவ்வாறான நிலையில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராயப்போனால் அரசாங்கம் தேர்தலை நடத்ததாது வீணாக கால தாமத்தை ஏற்படுத்தி வருவதாக அரசாங்கம் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு