10 மீனவர்கள் கைது

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 இந்திய மீனவர்களை நேற்றிரவு கடற்படையினர் கைதுசெய்து யாழ். நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று கையளித்துள்ளனர்.

ஜகதாப்பட்டினம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்த மீனவர்கள் ஒரு படகுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களை இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு