தேர்தலை பிற்போட அரசாங்கம் நாடகமாடுகிறது

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்காக அரசாங்கம் நாடகம் ஆடுவதாக கபே அமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது.

இதற்கமையவே நேற்றைய தினம் எல்லை மீள்நிர்ணய வர்த்தமானியை இரத்துச் செய்யக்கோரி 06 பேர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், இது தேர்தலை பிற்போடுவதற்கான புதிய யுக்தி என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கினைத் தாக்கல் செய்தவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் கண்டி, ஹாலிஎல, எம்பிலிப்பிட்டி, தெனியாய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு