இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 10 இந்திய மீனவர்களையும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். பருத்தித்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

தமிழகம் நாகைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 10 தமிழக மீனவர்கள் யாழ். பருத்தித்துறைக்கு வடக்கே 13 கடல்மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் இரண்டு இழுவைப்படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

குறித்த மீனவர்கள் இன்று யாழ். கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டவேளை மீனவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு