சக்தி வித்தியாலய காணி மக்களுக்குரியது

மீராவோடையில் பொது மக்களுக்கு சொந்தமான காணியை மீராவோடை சக்தி வித்தியாலயத்திற்கு சொந்தமானதெனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அந்தக் காணி பொது மக்களுக்குரியதென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்தக் காணியை பொதுமக்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம், இது பொதுமக்களுக்குரிய குடியிருப்பு காணியென தீர்ப்பு கிடைத்துள்ளதாக காணிக்குரிய பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்துக்கு அருகிலுள்ள காணி பாடசாலைக்குரிய காணியென பாடசாலை நிர்வாகமும், பெற்றோரும் வாதிட்ட போது, இது தங்களது குடியிருப்பு காணியென அப்பகுதி எட்டு முஸ்லிம் குடும்பங்கள் வாதிட்டு வந்தனர்.

இதனடிப்படையில் வாழைச்சேனை பொலிஸார் காணித் தகராறுகள் தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்றதுடன், வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி குறித்த காணியை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு