பியர் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்பு (Photos)

பாதீட்டில் பியர் விலை குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அதை உடனடியாக மீண்டும் அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மதுசாரத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு பேரணி நேற்று யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது, போதையற்ற நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் பியரின் விலையினை அரசாங்கம் குறைத்திருப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென இந்த கவனயீர்ப்பை மேற்கொள்பவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களின் பின்னணியிலும் போதைப்பொருள் பாவனை இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் இந்த விலைக்குறைப்பானது குற்றச்சம்பவங்களை அதிகரிக்க வழிவகுக்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு பியருக்கான விலையினை மீண்டும் அதிகரித்து அவர் வழங்கிய போதையற்ற நாடு எனும் வாக்குறுதியை பூரணமாக அமுல்ப்படுத்துமாறும் ஆர்ப்பாட்டக்கார்ர்கள் வலியுறுத்தியதுடன், ஜனாதிபதிக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் வடமாகாண ஆளுனர் அலுவலகத்திலும் யாழ். மாவட்ட அரச அதிபரிடமும் இவர்கள் கையளித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு