அறவழிப் போராட்டத்திற்கு அனந்தி அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், தொடர் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே என்றும் அறவழியில் எமது போராட்டங்களை முன்னெடுக்க வருமாறு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக இன்று அலுவலத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பு இடம்பெற்ற போதே அவர் குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியாகவே இன்றைய நல்லாட்சி அரசு முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனை உறுதிசெய்வதாகவே காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சிலருடனான நேற்றைய ஜனாதிபதியின் சந்திப்பும் அமைந்துள்ளதாகவும், காணாமல் போனோரின் உறவினர்களிடம் இருந்து முறைப்பாடுகளைப்பெற புதிய விண்ணப்பப் படிவம் ஒன்றை மாவட்ட செயலகங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதுடன், இந்த விண்ணப்பப் படிவம் ஊடாக அனைத்து தகவல்களையும் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட செயலர்களுக்கு சுற்றுநிரூபம் ஒன்றை அனுப்புவதற்கும் ஜனாதிபதியால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலரை அழைத்து ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொண்ட சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் எங்கே போனது? போரின் இறுதி காலகட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் நேரடியாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களென அத்தனை விபரங்களும் அவரவர் உறவினர்களால் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இருக்கையில் புதிதாக விண்ணப்பப் படிவம் அனுப்பி அவசரகதியில் விபரங்களை திரட்டுவதன் நோக்கம்தான் என்ன? ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவினர் முன்னிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் வழங்கிய சாட்சியங்களின் மீது எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத நல்லாட்சி அரசாங்கம் இவ்விடயத்தில் நாடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச நாடுகளுக்கு காட்டிக்கொள்வதற்காகவே மீண்டும் மீண்டும் பதிவுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் உட்பட தமிழர்கள் எதிர்நோக்கியிருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சந்திப்புகளும், பேச்சுக்களும் பயனற்றவை என்பதுடன், எமது போராட்டத்தை வலுவிழக்கச் செய்வதாகவும் அவை அமையும் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொண்டு தாங்கள் தமது கோரிக்கையில் உறுதியாக நின்று அதற்கான தீர்வு கிடைக்கும்வரை அறவழியில் தொடர்ந்து போராடுவது ஒன்றுதான் தமிழர்களாகிய எம்முன் உள்ள ஒரே தெரிவாகும் என்றும் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு