கோட்டாபயவின் கோரிக்கை நிராகரிப்பு

எவன்கார்ட் வழக்கில் பிரதிவாதிகளை நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் எழுத்துமூல அனுமதியின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய உள்ளிட்ட 06 பிரதிவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நஷ்டம் ஏற்படுத்தப்பட்டதாகக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு