சாலிய விக்ரமசூரியவை கைது செய்யப் பிடியாணை

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டிடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்றவகையில் கையாண்டதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறிது காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மருத்துவத் தேவைக்காக 08 வாரங்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதியும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த போதிலும், நிபந்தனையின்படி உரிய தினத்தில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகததன் காரணமாகவே அவருக்கு எதிராக இன்று பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மீண்டும் ஜனவரி 5ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு