யாழ்ப்பாணத்தில் ஆயுதக்குழுக்கள் தலையெடுக்க முடியாது – அமைச்சர் சாகல

ஆவா குழுவையோ, வேறு எந்தவொரு வன்முறைக் குழுக்களையோ யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலையெடுக்க அரசாங்கம் விடப்போவதில்லையென சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வன்செயல் குழுவின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் இந்தக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ், அதன் முழு சக்தியையும் பிரயோகிக்கும் எனவும், ஆவாகுழு, அண்மையில் யாழ்ப்பாணத்தில் எட்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறுபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இந்தக் குழுவிலுள்ள ஏனைய உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் குழு தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக யாழப்பாண பொலிஸ் பிரிவில் சகல பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளிலிருந்து கொண்டு இவ்வாறான ஆயுதக் குழுக்களை இயக்கிக்கொண்டிருக்கும் சூத்திரதாரிகள் பற்றிய முக்கிய விபரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு