மருத்துவத்துறைக்கு உதவ பில் கேட்ஸ் தீர்மானம்

இலங்கையின் மருத்துவத்துறைக்கு உதவ பிரபல அமெரிக்க வர்த்தகரும் மைக்ரோசொப்ட் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபகருமான பில் கேட்ஸ் முன்வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதாரம் தொடர்பாக அபுதாபியில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் அமைச்சர் ராஜித, பில் கேட்ஸ்சுடன் உரையாடிய போதே இந்த உதவியினை வழங்க அவர் முன்வந்துள்ளதாகவும், இந்த சந்திப்பின் போது இலங்கையின் சுகாதார தரப்பினர் சுகாதாரத்தின் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ள நிலையில், அதற்கு ஏற்ற வகையில் தாம் உதவ தயாராகவுள்ளதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு