சிம்பாப்வே ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்து

சிம்பாப்வே ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென அந்த நாட்டின் ஆளும் கட்சியான ஷானு பிஎவ் வலியுறுத்தியுள்ளது.

இந்த வலியுறுத்தலை முன்வைத்து தலைநகர் ஹராஹரேயில், இன்று பேரணியொன்று நடத்தப்படவுள்ள நிலையில், சிம்பாப்வேயின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர் வீட்டுக்காவலில் உள்ள நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி ரொபர்ட் முகாபே முதன்முறையாக நேற்று இடம்பெற்ற அந்நாட்டுத் தலைநகர் ஹராஹரேயிலுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளார்.

இதனிடையே முகாபேவுக்கும் இராணுவத்துக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையில் மூத்த கிறிஸ்தவ தேவாலய தலைவர்களும் தென்னாபிரிக்காவின் தூதர்களும் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு