வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் யோசனை முன்வைக்கவில்லை

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் தாம் யோசனை முன்வைக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், அரசியலமைப்பை உருவாக்கும்போது, இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத இடங்களில் மாற்று யோசனைகளை தாம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கை எனவும், அது மாற்று யோசனையாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் ஹக்கீம், அவ்வாறனதொன்று நடப்பதற்கு தமக்குள்ள வாய்ப்பு மிகவும் குறைவானது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஒதுக்கங்கள் மாற்றப்பட வேண்டுமென எதிர்பார்க்கவில்லை எனவும், ஒன்பது மாகாணங்களுக்கு உள்ளேயே இலங்கை பிரிக்கப்பட வேண்டுமென தமது யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனூடாக இணைப்பு என்ற விடயம் குறித்து தாம் பேசவில்லை என்பதே அதில் அர்த்தப்படுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு