நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெலைபேசி உரையாடல்கள் பதியப்படுகின்றன

அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச பணியாளர்களின் அனைத்து தொலைபேசி கலந்துரையாடல்களும் பதிவு செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறையடைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயற்குழு பிரதானி காமினி சேனரத்தை வெலக்கடை சிறைச்சாலைக்கு சந்தித்ததன் பின்னர் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இத்தனை காலமும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சார்ந்தவர்களின் தொலைபேசி மூலமான தொடர்புகள் மாத்திரமே கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ள நிலையில், தற்போது அரசாங்கத்தை சார்ந்தவர்களினதும் அரச பணியாளர்களினதும் வியாபாரிகளினதும் தொலைபேசி தொடர்புகளை இரகசியமாக கண்காணிக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு