வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா பஸ் நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபை பிரதேச முகாமையாளராக சேவையாற்றுகின்ற அதிகாரியின் எதேச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுவதும் இந்த பணி பகிஷசகரிப்பின் நோக்கம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் அனைத்தும் இன்று போக்குவரத்தில் ஈடுபடவில்லையெனத் தெரிவிக்கப்படும் நிலையில், இந்த பணிப்பகிஷ்கரிப்புக்கு இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா டிப்போ ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு