பெருந்தொகை மாவா போதைப்பொருள் மீட்பு

மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த பெருந்தொகை மாவா போதைப்பொருள் நிலையமொன்று கொட்டகலையில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது

தலவாக்கலை அதிரடிப் படையினரும் ஹற்றன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மாவா போதைப்பொருள் உட்பட இனிப்பு பானங்கள் புகையிலை போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு