தற்போது நாட்டிற்குள் நிலவுகின்ற நிலையற்ற தன்மை காரணமாக முதலீடுகள் வருவது குறைந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அபயாராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கடந்த அரசாங்க காலத்தில் வந்த முதலீடுகள் மாத்திரமே தற்போது எஞ்சியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.