அனைத்து இன மக்களையும் படையினர் இலங்கையர்களாக மதிக்க வேண்டும்

இலங்கையின் அனைத்து இன மக்களையும் ´இலங்கையர்கள்´ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியமாகுமென மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகால யுத்தமானது முப்படைகள் மத்தியில் இந்த எண்ணக்கருவை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருந்திருக்கலாம். ஆகவே, அரசியல் தலைமைத்துவமானது இந்த எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதுடன், இந்த எண்ணக்கருவை முப்படைகளுக்கும் வழங்கி, அதனை தீவிரமாக மேலோங்கச் செய்வதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முப்படைகளில் பல்லினத் தன்மையற்ற முறைமை களையப்பட வேண்டியதும் அவசியம் என்றும், இவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகின்ற சூழலே இந்த நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு பலமான அத்திவாரத்தை இடும் என்பதில் சந்தேகமில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயத் தன்மைகள் முழுமையாகவே அகற்றப்படாதிருக்கின்ற சமூகச் சூழலையே காணக்கூடியதாக இருப்பதாக வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வந்து செல்பவர்கள் குறிப்பிட்டு வருவது வழக்கமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு