குப்பை வீசிய 93 பேர் கைது

மேல் மாகாணத்தில் முறைகேடான விதத்தில் குப்பைகளை வீசிய குற்றச்சாட்டில் 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் இணைந்து, கடந்த 14ஆம், 15ஆம் திகதிகளில் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன், கொழும்பு வடக்கில் 13 பேரும் கொழும்பு மத்தியில் 19 பேரும், கொழும்பு தெற்கில் 7 பேரும், நுகேகொடையில் 7 பேரும், கல்கிஸையில் 6 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கம்பஹாவில் 26 பேரும் களனி, நீர்கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட இடங்களில் தலா ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு