லிந்துலை, மவுசெல்லை மேல் பிரிவிலுள்ள 200க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் பணிபுரியும் தோட்டகள உத்தியோகத்தர் ஒருவரை பணியில் இருந்து நீக்குமாறு கோரிய தோட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினமும் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.