கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை

இலங்கையின் கருவூலத்துறை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு மக்களின் மீதான கடன் சுமையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்திற்கு 03 ட்ரில்லியன் ரூபாய் கடன் சுமையுள்ள நிலையில், குறித்த மொத்த கடனும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நிறைவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஆட்சியில் பங்காளிகளாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தின் கோப் குழு மற்றும் பாதீடு தொடர்பான குழுவிலும் அங்கம் வகிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு