யாழில் 47 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 47 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் கோப்பாய், மானிப்பாய் போன்ற பகுதிகளில் சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, வடமாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கடந்த வியாழக்கிழமை அறுவர் கைது செய்யப்பட்ட நிலையில், கோப்பாய், மானிப்பாய், யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் ஆகிய பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு