கிழக்கு மாகாண ஆளுனரின் பணிப்புரைக்கு அமைவாக கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சி.எம்.செரீப், கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சிக்கான பிரதிப் பிரதம செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர உத்தியோகத்தரான இவர் கிண்ணியா, மூதூர், வாழைச்சேனை மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசங்களின் பிரதேச செயலாளராக பணியாற்றியுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக பேரவைச் செயலாளராக பணிபுரிந்த இவருக்கு, திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபராக்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.