வவுனியா நகரில் வர்த்தக நிலையம் தீக்கிரை

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வர்த்தக நிலையங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்து இன்று அதிகாலை 1.30 அளவில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவுவதை கவனித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஒலிபெருக்கியின் மூலம் சம்பவம் குறித்து அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அருகில் உள்ளவர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த போதிலும், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமையினால், சம்பவம் குறித்து வவுனியா நகர சபை தீயணைப்பு பிரிவிற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு பிரிவினர் உடனே தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இரண்டு வர்த்தக நிலையங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், மேலும் சில வர்த்தக நிலையங்களுக்கு சிறு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு