நீதிமன்றின் உதவியை நாடத் தீர்மானம்

ஹட்டன் மற்றும் தலவாக்கலை நகர சபைகளில் ஏற்பட்டுள்ள அநீதிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நீதிமன்ற உதவியை நாடவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் கல்வி வலயத்தின் செனன் தமிழ் மகா வித்தியாலய புதிய கட்டிடத் திறப்பு மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

45 வருட காலமாக ஹட்டன் நகரசபை பகுதிக்குள் வாக்காளர்களாக இருந்தவர்களில் அதிகமானோர், தற்போது பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல், தலவாக்கலை நகரசபை எல்லைப் பகுதியிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட செயலா அல்லது தற்செயலானதா என தெரியவில்லை என்றும், இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சட்ட உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1992ஆம் ஆண்டளவில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களினால் நுவரெலியா மாவட்டத்தை 12 பிரதேச சபைகளாக பிரிக்க எஸ்.பி.திசாநாயக்க, ரேணுகா ஹேரத், சீ.பி.ரத்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது, ரேணுகாவின் பேச்சில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அந்த விடயத்தில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டதாகவும், இப்போது 06 பிரதேச சபைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அப்போதே பேசினோம் என்று நாங்கள் கூறினால் உரிமை கோருவதாக தெரிவிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு