வைத்தியபீட மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

அனைத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வைத்தியபீட மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை இன்று முதல் மீண்டும் ஆரம்பிப்பதாக வைத்தியபீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியைத் தடைசெய்யக் கோரி இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த வைத்தியபீட மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்திருந்ததுடன், குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் நாடுபூராகவும் உள்ள சுமார் 6500 மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், சைட்டம் வைத்தியக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வினை ஏற்று 10 மாதங்களுக்குப் பிறகு வைத்தியபீட மாணவர்கள் இன்று தமது கற்றல் நடவடிக்கையை ஆரம்பிப்பதாக வைத்தியபீட மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு