சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவருக்கு சிறை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞனுக்கு 03 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 06 இலட்சம் ரூபா இழப்பீட்டை குற்றவாளி வழங்வேண்டும் எனவுமம், அதனை வழங்கத் தவறின் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்த வேண்டும் எனவும், செலுத்தத் தவறின் 06 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டார். அது தொடர்பில் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். சந்தேகநபர் மீது சிறுமியை வன்புணர்ந்த ஒரு குற்றச்சாட்டு மட்டும் முன்வைக்கப்பட்டு சட்டமா அதிபரால் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை இருப்பதால் எதிரிக்கு எதிராக மரபணு அறிக்கையை வழக்குத் தொடுனர் முன்வைத்தமையால், எதிரி குற்றத்தை இன்று மன்றில் ஏற்றுக்கொண்டார். எதிரியின் சட்டத்தரணி கருணை மனுவை மன்றில் முன்வைத்ததன் அடிப்படையிலேயே யாழ். மேல் நீதிமன்று மேற்கண்டவாறு தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு