ரயில் விபத்துக்களால் 180 பேர் பலி

இவ்வருடத்தின் இதுவரையான 10 மாதகாலப் பகுதியில் ரயில் விபத்துக்களால் 180 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வருடா வருடம் ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும், குறித்த காலப் பகுதியில் ரயில் குறுக்கு வீதிகளில், வாகனங்களுடன் ரயில் மோதிய சம்பவங்கள் 84 இடம்பெற்றுள்ளதுடன், ரயிலில் இருந்து பயணிகள் விழுந்துள்ள சம்பவங்கள் 76 பதிவாகியுள்ள அதேவேளை, ரயில் வீதிகள் அல்லது ரயில் வீதிக்கு குறுக்காக பயணித்தமையால் ஏற்பட்ட விபத்துக்கள் 436 இடம்பெற்றுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, வாகனங்கள் ரயில் குறுக்கு வீதிகளிலுள்ள வாயில்களில் மோதியமையால் ஏற்பட்ட 506 பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கடந்த 10 மாதங்களில் செல்பி எடுக்கும் முயற்சிகளால் ரயில் விபத்துக்களில் சிக்கி 24 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, ரயில் விபத்துக்களை குறைப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ரயில் குறுக்கு வீதிகளுக்கு அருகில் மக்களுக்கு தெளிவூட்டும் பதாகைகளை காட்சிப்படுத்தும் வேலைத் திட்டமும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு